"மாமன்னன்" படத்தின் டிரைலர் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது

#Cinema #TamilCinema #trailer #Movies
Mani
3 years ago
"மாமன்னன்" படத்தின் டிரைலர் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது

'கண்ணை நம்பாதே' படத்திற்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் 'மாமன்னன்'. இப்படத்தை ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்குகிறார். வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் இப்படத்தில் குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

மாமன்னன்' படத்தின் ரிலீஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தை வரும் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. மேலும், 'மாமன்னன்' படத்தின் டிரைலரையும் படக்குழு வெளியிட்டிருந்தது.

'மாமன்னன்' படத்தின் ட்ரைலர் 10 மில்லியன் பார்வைகளைக் கடந்து தற்போது யூடியூப்பில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4